கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது…

ஜெனிவா:
லகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில், உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களி எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 16 லட்சத்து 77 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 73 ஆயிரத்து 538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 1 ஆயிரத்து 559 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி