தீவிரவாத தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் மரணம் – 13 பொறியாளர்கள் கடத்தல்

ஆப்கானிஸ்தான்: 16 ராணுவ வீரர்களை கொன்ற நிலையில் 13 பொறியாளர்களை தாலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் அருகே பாக்திஸ் பகுதியில் உள்ள 8 சோதனை சாவடிகளை கைப்பற்ற தாலிபான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை 2 சோதனைச்சாவடிகளை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பாக்திஸ் பகுதியில் மூன்று நாட்களாக நடந்து வந்த சண்டை ஈத்-அல்-ஃபித்ர் விடுமுறையை ஒட்டி வெள்ளிக்கிழமையுடன் முடித்து கொள்வதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
terrorist attack
இந்த மூன்று நாள் சண்டையில் 16 ராணுவ வீரர்கள், 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2001ல் இருந்து கடுமையான இஸ்லாம் சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தாலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். கடந்த புதன் கிழமை நடைபெற்ற சண்டையில் 30 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் ராணுவ தளவாடம் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது.

அரசு அதிகாரி கூறுகையில், வீரர்களின் உடல்களில் வெடிகுண்டை வைத்து தீவிரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். சண்டையில் இறந்த உடல்களை மீட்கசென்ற போது வெடிகுண்டு வெடித்தது. அதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார். இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாலிபன் தீவிரவாதிகள் தொடர்ந்ந்து தங்கள் வேலையை செய்து வந்தனர்.

13 பொறியாளர்களையும், 20 பாதுகாப்பு அதிகாரிகளையும் தீவிரவாதிகள் பணய கைதிகளாக கொண்டு சென்றனர். அவர்களை மீட்க சென்ற வீரர்களில் 4பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்த இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த தாக்குதல் சம்வங்களை தொடர்ந்து சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான உறவை குறைத்து வருகின்றன.