சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 16 பேர் பலி…

சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும்.  833 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 39 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி  645 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உயிரிழப்பு தொடர்ந்து  அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.