தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது

--

கட்ச்: தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோற்று வருகிறது. அணியின் தொடர் தோல்வி, தோனியின் மோசமான ஆட்டம் ஆகியவை சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

தோனி மீது கடும் விமர்சனங்கள் முன்வைத்து ரசிகர்களில் ஒருவர், அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். மகள் ஜிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாலியல் ரீதியான மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது மனைவி சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த முந்தரா பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் மிரட்டல் விடுத்ததை மாணவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் கூறி உள்ளனர்.