16வயது சிறுமி பலாத்காரம்- குழந்தை பிறப்பு: கிறிஸ்தவ பாதிரியார் கைது

--
கைது செய்யப்பட்ட பாதிரியார் ராபின்

கண்ணூர்,

கேரளாவில் 16 வயது சிறுமியை கற்பழித்து, தாயாக்கிய பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரிகள் உள்பட மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி என்ற ஊர். இங்கு ஊரைச் சேர்ந்த 11வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை அப்பகுதி பாதிரியாரான ராபின் வடக்கும்செரில்  என்பவர்  பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

பாதிரியாரின் பலாத்காரத்துக்கு உடந்தையாக அவருடன் பணியாற்றிய 4 கன்னி யாஸ்திரிகளும் இருந்துள்ளனர்.

இந்த விஷயத்தை வெளியே சொன்னால், கொன்றுவிடுவேன் என்று மிரட்டிய தால் அந்த சிறுமி தனக்கு நடந்த சோகத்தை வெளியே சொல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாதிரியாரின் பலாத்காரத்தால் கர்ப்பமான மாணவி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றெடுத்தார்.

அதைத்தொடர்ந்தே இந்த விஷயம் வெளியே தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது,  அந்த  சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், பாதிரியார் ராபினை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, தொடர் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், பாதிரியார் ராபினுக்கு உதவிய  கன்னியாஸ்திரிகள் 4 பேர, மருத்துவர் ஒருவர் மற்றும் உதவியாளர் தங்கம்மா ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தலைமறைவான அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.