போக்குவரத்துத் துறையில் 16ஆயிரம் கோடி நஷ்டம்! ராமதாஸ்

--

சென்னை,

போக்குவரத்துத் துறையில் 16,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.

ஓய்வூதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் போக்குவரத்துதுறை பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், இதை சீரமைக்க வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் எனவும்  பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மிகவும் அதிகமாகும். இதனால் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2602.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2011-12ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8853.74 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் அவற்றை வலுப்படுத்த முடியாது.

எனவே, வல்லுனர் குழுவைஅமைத்து பேருந்து கட்டணங்களை பெரிய அளவில் உயர்த்தாமல், நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்துக் கழகங்களை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப்பெற வேண்டும்.

அவற்றை செயல்படுத்தி போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயங்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது