சென்னை:

 தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1,654 பேர் சென்னையைச் சேரந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று  பாதித்தோரின் எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.

bty

இன்று (24-06-2020 )  மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67,468 ஆக உயர்ந்துள்து. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  45,814 ஆக அதிகரித்துள்ளது.  மூன்றில் 2 பங்கு பாதிப்பு சென்னையிலேயே உள்ளது.

அதுபோல சென்னையில் இன்று  33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்,  சென்னையில் உயிரிழப்பு 668 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  866 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.

சென்னையில், இதுவரை நோய் தொற்றில் இருந்து   26,472 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தமிழகத்தில் 2,744 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக விவரம்:

சென்னை – 1,654, திருவள்ளூர் – 87, செங்கல்பட்டு – 131, மதுரை – 97, திருவண்ணாமலை – 54, காஞ்சிபுரம் – 66, நாகப்பட்டினம் – 2, கோவை – 22, அரியலூர் – 8, கடலூர் – 41, தருமபுரி – 1, திண்டுக்கல் – 13, ஈரோடு – 4, கள்ளக்குறிச்சி – 18, கன்னியாகுமரி – 22, கரூர் – 9, கிருஷ்ணகிரி – 3, நாமக்கல் – 1, நீலகிரி – 2, பெரம்பலூர் – 5, ராணிப்பேட்டை – 2, புதுக்கோட்டை – 13, ராமநாதபுரம் – 1, சேலம் – 55, சிவகங்கை – 15, தென்காசி -5, தேனி – 81, தஞ்சை – 15, திருப்பத்தூர் – 11, திருவாரூர் – 31,தூத்துக்குடி – 49, நெல்லை – 32, திருச்சி – 76, வேலூர் – 51, விருதுநகர் – 40, விழுப்புரம் – 34 பேரும், திருப்பூர் – ஒருவரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.