எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 168 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Indonesia

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதில் பெரும் புகையும், நெருப்பு குழம்புகளும் வெளியேறின.

எரிமலை வெடிப்பால் அப்பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்தது. இதனால் அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அச்சம் அடைந்தனர். எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுந்தா ஜலசந்தி பகுதியில் ராட்சன சுனாமி அலைகள் எழுந்தன. சுமார் 65 அடி உயரம் எழுந்த அலைகள் கரைப்பகுதியை அடைந்து அனைத்தையும் சேதப்படுத்தின.

Indonesia

இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. இதனால் ஜாவா தீவில் உள்ள பாண்டென் மாகாணம் பாதிப்பிற்குள்ளானது. சுனாமி அலைகளினால் நூற்றுக்கணகான வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. சாலைகள் கடல்நீரால் நிரப்பட்டப்பன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடி தஞ்சம் அடைந்தனர்.

Indonesia

இந்நிலையில் சுனாமி பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுனாமி பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் துரிதப்பட்டுத்தப்பட்டுள்ளன. பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கிராகடாவ் எரிமலை வெடித்தபோது நிலநடுக்கமும், கடலுக்கு அடியில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால்தான் சுனாமி அலைகள் உருவாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி