16ந் தேதி பந்த்….? விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு!

 

சென்னை:

வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள், டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தேமுதிக சார்பில் அன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் ஏற்கனவே கூறி உள்ளார். கம்யூனிஸ்டு கட்சியினரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.  இதன் காரணமாக தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை  (16ந்தேதி) றிவிக்கப்படாத பந்த் நடைபெறும் என தெரிகிறது.

காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி வரும் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தின் போது, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன் கூறியதாவது: 

சுப்ரீம் கோர்ட் மூலம் காவிரி நீரை பெற்றுத்தந்த தமிழக அரசை பாராட்டுகிறோம். இந்த விவகாரத்தில் கர்நாட அரசின் அடாவடித் தனத்தை கண்டித்து வரும் 16-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்கின்றனர்.

 தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: 
காவிரி பிரச்னைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அடியெடுத்து வைக்கும் முதல் ஆதரவு இந்த கடையடைப்பு ஆகும். அனைத்து கடைகளும் அடைக்கப்பட ஆதரவு தெரிவித்துள்ளதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 21லட்சம் கடைகள் மூடப்படும்,

11லட்சம் வாகனங்கள் இயங்காது,

55ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது,

சினிமா தியேட்டர்கள்,மால்கள் திறக்கப்படமாட்டாது,

ஆட்டோ,பேருந்துகள்  இயங்காது ,

கர்நாடகா கற்றுக்கொடுத்த ஒற்றுமை பாடத்தில் தமிழகம் விழித்துக்கொண்டுள்ளதை நாம் வரவேற்காமல் இருக்க முடியாது என்றார்.

மேலும் ஒரு டீக்கடை கூட இயக்காது என்றும் கூறினார்.

எந்த ஒரு சமூகத்திற்கும் ஒரு பொது பிரச்னை ஏற்படும்போதுதான் அந்த சமூகம் விழித்துக்கொள்ளும். அந்த வகையில் காவிரி என்னும் பொது பிரச்னை நம்மை சிந்திக்க வைத்துள்ளது.

இதற்கு அனைத்து வணிகர்கள்,வாகன ஓட்டிகள் மற்றும் சினிமா தியேட்டர்கள், மால்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருப்பதாக வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு

நாமக்கல்: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து செப்டம்பர் 16ம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு. தெரிவித்து உள்ளது.

தேமுதிக சார்பில் உண்ணாவிரப் போராட்டம்

தேமுதிக சார்பில் செப்டம்பர் 16-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கம்யூனிஸ்டு கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அன்று தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்படும் என தெரிகிறது.