டெல்லி: இந்தியாவில் ஜெட் வேகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது தீவிரமடைந்துள்ளத. இதனால், பல மாநிலங்களில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் தினசரி பாதிப்பு லட்சத்தை தாண்டி உள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சம் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,33,757 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா மொத்த பாதிப்பு, 1,45,21,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,26,66,889 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 16லட்சத்து 73ஆயிரத்து 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1338 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பபு 1,75,673 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளான 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேரில், 79.10 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள். அந்த மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார், கர்நாடகம், மத்திய பிரதேசம், குஜராத் கேரளா, தமிழகம், மேற்குவங்காளம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 61 ஆயிரத்து 695 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 22 ஆயிரத்து 339 பேரும், டெல்லியில் 16 ஆயிரத்து 699 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நாட்டில் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 210 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றின் 2வது அலை ல் ‘ஜெட்’ வேகத்தில் பரவி வருவதால் மக்களிடைய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.