சென்னை:

மிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174  பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்  1276 பேர்  இன்று பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பாதிப்பு பாதிப்பு எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை (17-06/2020) நிலவரப்படி சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள 35,556 பேரில், 16,067  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 19,027 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக, சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்: 

செங்கல்பட்டு – 162,  சென்னை 1276, கோவை 2, கடலூர் 63, தருமபுரி 9, திண்டுக்கல் 15,  கள்ளக்குறிச்சி 16, காஞ்சிபுரம் 61, கன்னியாகுமரி 7, கரூர் 8, கிருஷ்ணகிரி 3, மதுரை 27, நாகை  13, நாமக்கல் 2,  நீலகிரி 5, புதுக்கோட்டை 9, ராமநாதபுரம் 50,  ராணிப்பேட்டை 68, சேலம் 16,  சிவகங்கை 12, தென்காசி 5, தஞ்சாவூர் 12, தேனி 3,  திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 90, திருவண்ணாமலை 47, திருவாரூர் 15, தூத்துக்குடி 43, திருநெல்வேலி 11, திருச்சி 8, வேலூர் 15, விழுப்புரம் 18, விருதுநகர் 2.