டெல்லி:  இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்து வருகிறது.

இன்று (ஆகஸ்டு 17ந்தேதி) காலை 7 மணி  நிலவரப்படி, இதுவரை  26லட்சத்து 47ஆயிரத்து 316 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கு 77 ஆயிரத்து 689 ஆக உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,58,395 பேரும், ஆந்திர மாநிலத்தில் 85,945 பேரும், கர்நாடகாவில் 81,510 பேரும், தமிழகத்தில் 54,019 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 19லட்சத்து 18ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆயிரத்து 45 ஆக அதிகரித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக  மகாராஷ்டிரா மாநிலத்தில் 20,037 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் நாட்டிலேயே  முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தை தமிழ்நாடும், 3வது இடத்தில் ஆந்திர மாநிலம், 4வது இடத்தில் கர்நாடக மாநிலமும், 5வது இடத்தில்  உத்தரபிரதேச மாநிலம் திகழ்ந்து வருகிறது.