ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி  2 கோடியே 18 லட்சத்து 22 ஆயிரத்து356  பேர் .

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எங்ணணிக்கை 7 லட்சத்துத்து 72ஆயிரத்து 965 பேர்.

இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை  1கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்து 972 பேர்.

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது.. அமெரிக்காவில் இதுவரை 55.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 36 ஆயிரம் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் 1.73 லட்சம் பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள நாடு  பிரேசில். இங்கு இதுவரை  33 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை  1.07 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளனர்.

உலக அளவில் தொற்று பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.

கொரோனா தடுப்பு மருத்து கண்டுபிடிப்பில் ரஷ்யா முதலிடத்தில் இருந்து வருகிறது. விரைவில் தடுப்பு மருத்து பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளது. அதுபோல, இந்தியா, அமெரிக்கா,  இஸ்ரேல் உள்பட பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.