17/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  3,38,055 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு நேற்று   ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,16,650-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  1009 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,02,698 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று  ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,454 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 11,498 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  நேற்று ஒரேநாளில், 11,375 பேருக்கு கொரேனா சோதனை நடத்தப்பட்டதாகவும் தமிழக  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.