பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவாக, ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் அவர்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்தி வழக்கிலும் உச்சநீதி மன்றம் அவர்களின் தகுதி நீக்கம் சரியே என்று தீர்ப்பு வழங்கியதுடன், இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்கள் என்று மாநில  துணை முதல்வர்  அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயண்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பா.ஜனதா கட்சிக்கு வரும் அவர்களை வரவேற்கிறோம். இதுதொடர்பாக அவர்கள் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளனர். பா.ஜனதா கட்சியில் சேரும்படி அவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. அவர்கள் பா.ஜனதா கட்சியில் சேர விரும்பினர். அதன்படி கட்சியில் சேர உள்ளனர் என்று தெரிவித்து உள்ளனர்.