டில்லி,
ந்தியா முழுவதும் 17 லட்சம் கோடி ரூபாய் புதிய  நோட்டுகள் பழைய நோட்டுகளுக்கு பதிலாக மாற்றப்படுகிறது என்று இந்திய ரிசர்வ் தெரிவித்து உள்ளது.
பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் இன்று முதல் புழக்கத்திற்கு வருகிறது.
notes
17லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய நோட்டுகள் மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில்  ரூ.500, ரூ.1000 நோட்டுகள்தான் அதிகம் உள்ளன. இந்தியாவில் தற்போது உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் 47.8 சதவீதம் உள்ளன. அதாவது பாதிக்கும் பாதி பண நோட்டுகள் ரூ.500 நோட்டுகளாகும்.
ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10, ரூ.5, ரூ.2 ஆகியவை மிக, மிக குறைவாகவே உள்ளன.
அதேபோல்,  38.6 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுகள்  உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் சுமார் 86 சதவீதம் உள்ளன.
new-currency
இந்த நோட்டுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு (2017) மார்ச் மாதத்துக்குள் மாற்றப்பட வேண்டும்.
இதன் மூலம் இன்னும் 4 மாதங்களில் இந்தியா முழுவதும் எல்லோரது கைகளிலும் புதிய ரூபாய் நோட்டுகள் இடம் பெறும்.
இந்த நோட்டுக்கள் சகஜமாக புழக்கத்திற்கு வர 3 வாரம் ஆகும் என்று அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
ஆனால் குறைந்தது 3 மாதமாவது ஆகும் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.