தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற எம் எல் ஏக்கள் 17 பேர் மனு

டில்லி

மிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 17 பேர் மனு அளித்ஹ்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர்.   அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.    அதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியாகியது.

வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார்.   மற்றொரு நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார்.    இரண்டு நீதிபதிகளும் இரு விதமாக தீர்ப்பு அளித்ததால் இந்த வழக்கு விசாரனை மூன்றாவது நிதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த வழ்=க்கில் 3 ஆவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதுவரை இந்த 3 ஆவது நீதிபதி விசாரணையை தொடரவில்லை.    இந்த 18 பேரில் ஒருவரான தங்கத் தமிழ்செல்வன் வழக்கை திரும்பப் பெறப்போவதாக தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது.

தங்கத் தமிழ்ச் செல்வனை தவிர மீதமுள்ள 17 பேர் இந்த வழக்கை உச்சநீதிமன்றக்கு மாற்ற வேண்டும் என மனு அளித்துள்ளனர்.   அவர்கள் சென்னை உயர் நீத்மன்றம் விசாரணை நடத்தினால் உரிய நீதி கிடைக்காது எனக் கருதுவதாக தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.