டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி  உள்ள நிலையில்,  17 எம்.பி.க் களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 5 மாதங்களுக்கு பிறகு இன்று பாராளுமன்ற கூட்டத் தொடர்  தொடங்கி உள்ளது.  இன்றுமுதல் அக்டோபர் 1-ந் தேதி வரை  மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி  எம்.பி.க்களும், பாராளுமன்ற ஊழியர்கள், சபைக்காவலர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும், கொரோனா நெகடிவ் உள்ளவர்கள் மட்டுமே சபையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மழைக்காலக் கூட்டத் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 17 எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,

பாரதியஜனதா கட்சி -12 பேர்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – 2

சிவசேனா – 1 பேர்

திமுக எம்.பி – 1

ஆல்எல்பி கட்சி – 1

ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.