தாய்பே: தைவான் நாட்டின் கடற்கரை நகரான ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் தாய்பேயில் தற்காலிகமாக சுரங்கப்பாதை போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

கிழக்கு ஹுவாலியன் பகுதியில், சரியாக பிற்பகல் 1 மணிக்கு, 19 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ஆண்டில், இத்தீவில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் இதுவாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தாய்பே நகரில் பள்ளிக் கட்டடங்கள் குலுங்கியதால், பள்ளிக் குழந்தைகள் பயத்துடன் வெளியே ஓடிவந்தனர். மேலும், சில இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

– மதுரை மாயாண்டி