Random image

அரசு உயரதிகாரிகள் வீடுகள் உள்பட 17 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை! பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் அரசு உயரதிகாரிகளின்  வீடுகள் உள்பட 17 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக அரசின் முக்கிய உயர் அதிகாரியான  பெங்களூரு வளர்ச்சி முகமை தலைமை பொறியாளர் கவுடய்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் உயர்அதிகாரிகளின் வீடுகள் உள்பட 17 இடங்களில் அதிரடியாக சோதனை நடை பெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, பெங்களூரு, சிந்தாமணி, மைசூரு, உடுப்பி, சிக்மகளூர், மங்களூரு, கர்வார் உள்பட   5 அரசு  உயர் அதிகாரிகள் வீடுகள் உள்பட 17 இடங்களில் இந்த  அதிரடி சோதனை நடை பெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று  ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.