டில்லி,

டில்லியில் ஏற்பட்டுள்ள கடும் பனி மூட்டம் காரணமாக பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்களும் மற்ற மாநிலங்களுக்கு திரும்பி விடப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக தலைநகர் டில்லியில் கடும் பனி மூட்டம் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், டில்லியில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் , 26 ரயில்கள் தாமதமாக புறப்படும் என்றும், 6 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் டில்லி  ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

அதுபோல பெரும்பாலான விமானங்களின் புறப்பாடு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள தாகவும், சில வெளிநாடு விமானங்கள் மற்ற மாநிலங்களுக்கு திரும்பி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.