டில்லி

ந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரொனவால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ள ஹாட் ஸ்பாட்டுகள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு இந்திய முழுவதும் ஊரடங்கை மே 3 ஆம் தேதி  வரை நீட்டித்துள்ளது.  மத்திய சுகாதாரத் துறை அளித்துள்ள தகவலின் படி தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933 ஆகி உள்ளது.   இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் இன்று செய்தியாளர்களிடம், “கொரோனா பாதிப்பின் மைய இடங்களாக விளங்கும் பகுதிகளை ஹாட் ஸ்பாட் எனவும் பாதிப்புக்கு உள்ளாகாத பகுதிகளை நான் ஹாட் ஸ்பாட் எனவும் இருவகைகளாக மாவட்ட வாரியாக பிரித்துள்ளோம்.

இதைத் தவிர ஹாட் ஸ்பாட்டாக மாறக்குட்டிய சாத்தியம் உள்ள ஹாட் ஸ்பாட்டுகளை மூன்றாவதாக பிர்க்கபட்டுள்ளது.  170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்டுகள் அதாவது பாதிப்பு அதிகமாக உள்ள பகுதி எனப் பிரித்துள்ளோம்.  இந்த பகுதிகளில் பரவுவது அதிகமாக இருக்கும்.

அத்துடன் 207 மாவட்டங்களை சாத்தியமான ஹாட் ஸ்பாட்டுகள் எனப் பிரித்துள்ளோம்.  இங்கு பரவுதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஹாட் ஸ்பாட்டுகளில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்த பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.