க்னோ

பாதுகாப்பு கவசங்கள் அளிக்காததால் 17000 உத்தரப்பிரதேச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

நாடெங்கும் பரவி வரும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஆம்புலன்ஸ் ஊழியர்களின் முக்கிய பணியாகும்.  இவர்களுக்கு கொரோனா நோய் தொற்ற அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.  எனவே அனைவரையும் விட முக்கியமாக இவர்களுக்குப் பாதுகாப்புக்காக முகக் கவசம், கையுறை, சானிடைசர் போன்றவை அவசியம் ஆகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 102 மற்றும் 108 சேவையில் சுமார் 4500 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு இது போன்ற பாதுகாப்பு கவசங்கள் எதுவும் அளிக்கப்படுவதில்லை எனப் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.  அத்துடன் இவர்களுக்கு 2 மாத சம்பளப் பாக்கியும் உள்ளதாகக் கூறப்படுகிறது

இந்த ஆம்புலன்ஸ்களில் பணி புரியும் 17000 தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்கு இதுவரை அரசு மற்றும் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் உள்ளிட்டவை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.  இதனால் அவர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர்.  எனவே தற்போது உ பி மாநிலத்தில் ஆம்புலன்ஸ் எதுவும் ஓடவில்லை.