நியூயார்க்:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, உலக வல்லரசனா அமெரிக்காவால் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அங்கு இதுவரை 1704 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 8 பேர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

நியூயார்க் நகரில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பு 42 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

.ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி, , கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு, சீனாவை விட அமெரிக்காதான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

சீனாவில், 81,782 பேர் மட்டுமே கொரேனாவால் தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் 104,256 பேர் இதுவரை நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதுபோல உயிரிழப்பு 1704ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 130 பேர் நோயில் இருந்து குணமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும்  செய்தியாளர்களை சந்தித்து வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், “நாம் செய்து வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும், நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று சமாதானன்ம கூறி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அமெரிக்கா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்,ஏப்ரல் 12ம் தேதிக்கு முன்னதாக இந்த முடக்க நிலையை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் பரவி வரும் நோய் தொற்று முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான சேதங்களை ஏற்படுத்தி வருவதாகவும், கொரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், சேவை மற்றும் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

விமானம், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கார் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது பலத்த பொருளாதார சிக்கலை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய  மாகாணங்களான டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் நியூயார்க் மாநிலங்களில் கொரோனா தொற்று பரிசோதனை விவரம் வெளியாகி உள்ளது.

டெக்சாஸ் மொத்த சோதனைகள்: 23666
நேர்மறை (Negative): 1731
ஒவ்வொரு 13 நபர்களில் 1 பேர்

கலிபோர்னியாவின் மொத்த சோதனைகள்: 21259
நேர்மறை (Negative) : 3879
ஒவ்வொரு 5 நபர்களில் 1 பேர்

நியூயார்க் மொத்த சோதனைகள்: 145753
நேர்மறை (Negative): 44635
ஒவ்வொரு 3 நபர்களில் 1 பேர்

மார்ச் 26 நிலவரப்படி கலிபோர்னியாவில் சோதனை முடிவுகள் நேர்மறை ((Negative):

வயது 0-17: 45
வயது 18-49: 1,906
வயது 50-64: 967
வயது 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்: 847 வழக்குகள்
தெரியவில்லை: 36 வழக்குகள்

நியூயார்க்கில் கொரோனா வைரஸ் இறப்புகள் ஒரு நாளைக்கு சுமார் 42% ஆக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.