கடந்த 24 மணிநேரத்தில் 1718: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,050 ஆக உயர்வு

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1718 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை  பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 33050 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் குணமடைந்து உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்து உள்ளது.

இதுவரை மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 ஆக உய்ரந்துள்ளது.  இது கடந்த 14 நாட்களில் அதிகம் என்றும், மீட்பு வீதம் 25.19%  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல பலி எண்ணிக்கையும் 1,074 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,  செயலில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகள் 23651 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.