பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன்

சென்னை:

ள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான  17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

வரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குக்சாவடிகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளது.

tntc

நகர்புறத்தில் 28,761 வாக்குச்சாவடிகளும்,  ஊரக பகுதிகளில் 62,337 வாக்குச்சாவடிகளும் மற்றும்  சென்னை மாவட்டம் உள்பட மொத்தம் 91,098 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதில் 17,495 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.

 இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மாநில தேர்தல் ஆணையம் ரூ.3 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கி இருக்கிறது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி