திருமலை:

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு 2 நாள் இலவச தரிசனம் அளிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான்ம் அறிவித்து உள்ளது.

அதன்படி வரும்  17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இலவச தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மாதம்தோறும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் 5 வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இலவச தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி,  இந்த மாதத்திற்கான இலவச தரிசன சேவை  17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

17ம் தேதி மூத்த குடிமக்களுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தரிசனம் கொடுக்கப்படவுள்ளது.  காலை 10 மணிக்கு ஆயிரம் பேருக்கும், மதியம் 2 மணிக்கு இரண்டாயிரம் நபர்களுக்கும், மாலை 4 மணியளவில் ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 4 ஆயிரம் பக்தர்கள் அன்று இலவச தரிசன சேவையை பெறுகிறார்கள்.

18ம் தேதி அன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு ’சுபதம்’ வழியாக இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை இந்த தரிசனம் வழங்கப்படவுள்ளது.

இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது.