சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 457 பேருக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து, தமிழக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது,

மாநிலத்தில் இன்று 51,101 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக 457 பேருக்கு  தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,46,937 ஆக உயர்நதுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 470 போ குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,30,320-ஆக உள்ளது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,173 பேர் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம்  5,11,793 பேர் ஆண்கள், 3,35,109 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 188 பெண்கள்  269 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

‘தமிழகத்தில் இன்று மட்டும் 50,944 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 1,66,52,934 ஆக இருக்கின்றது.

தமிழகத்தில் தற்போது 4,173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை  35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 255 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 187.

வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில்  மகாராஷ்டிரா-2. பீகார்-1.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.