18/05/20202 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்…

சென்னை:

மிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.  வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தமிழக்ததிற்குள் வந்துள்ள நிலையில், தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெருநகர பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து, மண்டலவாரி நிலைப் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6750 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் நோய்தொற்று உள்ளவர்கள்  5167 பேர் என்றும், நேற்று மட்டும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 482 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு பலியோனார் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை  1498 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து  கோடம்பாக்கம் மண்டலத்தில் 1041 பேருக்கும், திரு.வி.நகர் மண்டலத்தில் 790 பேருக்கும்,  தேனாம்பேட்டை மண்டலத்தில் 746 பேருக்கும், தண்டடையார்பேட்டை மண்டலத்தில் 581 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.