சென்னை:  தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 33,059பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16லட்சத்து 64ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 18,718பேர் ஆண்கள், 14,341பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 6,016பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,42,929ஆக அதிகரித்துள்ளது.

இன்று 364பேர் உயிரிழந்துள்ளார். 172பேர் தனியார் மருத்துவமனையிலும், 192பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,369ஆக அதிகரித்துள்ளது.

இன்று 21,362பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னையில் இன்று ஒரே நாளில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இன்று மட்டும் 5,509 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 85 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 176
செங்கல்பட்டு 2,299
சென்னை 6,016
கோவையில் 3,071
கடலூர் 591
தர்மபுரி 295
திண்டுக்கல் 323
ஈரோடு 1,568
கல்லக்குறிச்சி 291
காஞ்சிபுரம் 761
கன்னியாகுமரி 863
கரூர் 313
கிருஷ்ணகிரி 610
மதுரை 1,011
நாகப்பட்டினம் 652
நாமக்கல் 384
நீலகிரி 340
பெரம்பலூர் 243
புதுக்கோட்டை .234
ராமநாதபுரம் 192
ராணிப்பேட்டை 539
சேலம் 650
சிவகங்கை 184
தென்காசி 346
தஞ்சாவூர் 475
தேனி 667
திருப்பத்தூர் 806
திருவள்ளூர் 1,890
திருவண்ணாமலை 456
திருவாரூர் 805
தூத்துக்குடி 1,352
திருநெல்வேலி 589
திருப்பூர் 1,561
திருச்சி 1,271
வேலூர் 520
விழுப்புரம் 239
விருதுநகர் 476