சென்னை:

மிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  நேற்று ஒரேநாளில் மேலும் 2174  பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாளுக்கு அதி அதிகமாகி வருகிறது.  சென்னையில்  1276 பேர்  இன்று பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பாதிப்பு பாதிப்பு எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 16067 பேர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை19027, பலியானோர் எண்ணிக்கை 461.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,626 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்து உள்ளது.

17.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 54% பேர் (19,027) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 5626 பேர்,  தண்டையார்பேட்டை – 4,549 பேர், தேனாம்பேட்டை- 4,334 பேர், கோடம்பாக்கம்- 3,801 பேர், அண்ணாநகர்-  3,636 பேர், திருவிக நகர்-  3,160  பேர், வளசரவாக்கம்- 1497 பேர்,திருவொற்றியூர்-1324 பேர், அம்பத்தூர் -1243 பேர், அடையாறு – 2,069 பேர், மாதவரம்- 955 பேர்,பெருங்குடி- 684 பேர், சோழிங்கநல்லூர்- 677 பேர், ஆலந்தூர்-736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.