சென்னை:
மிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,049 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,13,856பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,219 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  84,598 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பட்டுள்ளோர் விவரம்:
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில்  இன்று 1219 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்  370 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 323 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு  விவரம்:

1.அரியலூர் 10
2.செங்கல்பட்டு 323
3.சென்னை 1219
4.கோயம்புத்தூர் 118
5.கடலூர் 34
6.தர்மபுரி 54
7.திண்டுக்கல் 107
8.ஈரோடு 12
9.கள்ளக்குறிச்சி 77
10.காஞ்சிபுரம் 97
11.கன்னியாகுமரி 146
12.கரூர் 13
13.கிருஷ்ணகிரி 33
14.மதுரை 185
15.நாகப்பட்டினம் 22
16.நாமக்கல் 28
17.நீலகிரி 40
18.பெரம்பலூர் 4
19.புதுக்கோட்டை 34    20.ராமநாதபுரம் 67    21.ராணிப்பேட்டை 109    22.சேலம் 49    23.சிவகங்கை 176 24.தென்காசி 92    25.தஞ்சாவூர் 181    26.தேனி 144   27.திருப்பத்தூர் 3     28.திருவள்ளூர் 370 29.திருவண்ணாமலை 72    30.திருவாரூர் 28    31.தூத்துக்குடி 161     32.திருநெல்வேலி 161
33.திருப்பூர் 24     34.திருச்சி 124    35.வேலூர் 191    36.விழுப்புரம் 96    37.விருதுநகர் 179
இன்றைய நிலவரப்படி மாவட்டங்களில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம்…

சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 1,905 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,463 பேருக்கும் திருநெல்வேலியில் 2,504 பேருக்கும், ஈரோட்டில் 473, திருச்சியில் 2,126 பேருக்கும், நாமக்கல் 305 மற்றும் ராணிப்பேட்டை 2,022, செங்கல்பட்டு 9,360, மதுரை 8,044, கரூர் 244, தேனி 2,374 மற்றும் திருவள்ளூரில் 8,702 பேருக்கு, தூத்துக்குடியில் 3,290, விழுப்புரத்தில் 2,136 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 379 பேருக்கும், திருவண்ணாமலையில் 3,781, தருமபுரியில் 378 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருப்பூரில் 433, கடலூர் 1,725, மற்றும் சேலத்தில் 2,234, திருவாரூரில் 859, நாகப்பட்டி னம் 418, திருப்பத்தூர் 515, கன்னியாகுமரியில் 2,187 மற்றும் காஞ்சிபுரத்தில் 4,519 பேருக்கும், சிவகங்கை 1,438 மற்றும் வேலூரில் 3,814 பேருக்கும், நீலகிரியில் 410 பேருக்கும், தென்காசி 1,019, கள்ளக்குறிச்சியில் 2,184 பேருக்கும், தஞ்சையில் 1,131, விருதுநகரில் 3,127, ராமநாதபுரத்தில் 2,316 பேருக்கும், அரியலூர் 620 மற்றும் பெரம்பலூரில் 204 பேருக்கும், புதுக்கோட்டையில் 941 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.