சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1182 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மாவட்டம் வாரியாக தொற்று பாதிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தொற்று பாதிப்பில் இந்தியாவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது.  ஆனால்,  கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 67,025 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,709 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2,10,953, பெண்கள் 1,38,672, திருநங்கைகள் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5,850 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 2,89,787 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 53,860 பேர் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் களில் 121 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு  மருத்துவமனையில் 89 பேரும் அடங்குவர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 5,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,89,787 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 65,075 பேருக்கு செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 37,12,657 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 53,860 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 6,007 பேர் கொரோனாவால் பாதித்து உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை யில் 2501 பேர், செங்கல்பட்டு 356, கோவை 201, காஞ்சிபுரம் 186, கன்னியாகுமரி 126, மதுரை 327, தேனி 117, திருவள்ளூர் 346, திருவண்ணாமலை 127, நெல்லை 130, வேலூர் 121, விருதுநகர் 159 என 12 மாவட்டங்களில் இதுவரை 4697 பேர் உயிரிழந்துள்ளனர்.