18/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  3,43,945 ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில்  நேற்று  1185 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,17,839 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் தினசரி ஆயிரத்தை தாண்டி வருகிறது.  இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,17,839-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று  660 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,03,358 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய , 12,003 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,478  பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தமிழக  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: