18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு…3வது நீதிபதி முன்பு நாளை விசாரணை

சென்னை:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வது நீதிபதி முன்பு நாளை விசாரணை தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் வரையில் விசாரணை நடைபெற உள்ளது.

அ.தி.மு.கவை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

3வது நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த விசாரணை நாளை தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.