தகுதி நீக்க வழக்கு  தீர்ப்பு : அடுத்து என்ன நடக்கும்?

18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  எதிராக ,  டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர், அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர்.   இந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து  அவர்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30க்கு அளிக்கப்பட இருக்கிறது. இத்தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. காரணம் இத்தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால்?

18 எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்துக்கு வருவார்கள். முதல்வர் மீது   நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அவர்கள் முயற்சக்க கூடும். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

அதே நேரம் தகுதி நீக்கம் செல்லாது என்கிற தீர்ப்பை (அப்படி அளிக்கப்பட்டால்) எதர்த்து எடப்பாடி அரசு மேல் முறையீடு செய்யலாம். அப்படி செய்து, தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றால், தற்போதைய நிலையே தொடரும். வழக்கு உயர்நீதிமன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றத்திற்கும் மாறும்.

.தகுதி நீக்கம் செல்லும் என்று ஒரு வேளை அறிவிக்கப்பட்டால்?

18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அல்லது , மேல்முறையீடுக்குச் செல்லாமல், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராகலாம்.

சட்ட நிபுணர்கள் கருத்து:

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் ஏற்கனவே இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த நிலையில், அவற்றில் ஒன்றை ஏற்றுத்தான் இந்க மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளிப்பார். புதிதாக ஒரு தீர்வை – தீர்ப்பை அளிக்க வாய்ப்பில்லை என்ரு சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.