18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: டிடிவி தரப்பினர் மேல்முறையீடு செய்ய முடிவு

மதுரை:

18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் அணி முடிவு செய்துள்ளது. அதை தங்கத்தமிழ்செல்வன் உறுதிபடுத்தி உள்ளார்.

முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கில், 3வது நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு கூறினார்.

மதுரையில் ஆலோசனை நடத்தும் டிடிவி தரப்பினர்

இது தமிழகத்தில், பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றாளத்தில் கும்மாளமிட்டு வந்த டிடிவு ஆதரஹவ 18 தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களும்  அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பி மதுரை வந்தனர். அவர்களுடன் டிடிவி தினகரன் அடுத்த கட்ட திட்டம் பற்றி இன்று ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து,  மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் செய்தது தவறு என்பதை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக 18 எம்எல்ஏக்கள்  சார்பில் தகுதி நீக்கம் எதிர்த்து  மேல்முறையீடு செய்யப்படும் என்றும், இன்னும்  2 அல்லது 3 நாட்களில் மேல்முறையீடு செய்ய 18 பேரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்,  நாளையே தேர்தல் வந்தாலும் 18 எம்எல்ஏக்களும் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும் டிடிவி ஆதரவு  தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

மேலும்,  22 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்யக் கோரி நவ. 10-ம் தேதி முதல் உண்ணா விரதம் நடைபெறும்,  இறுதியாக ஆர்.கே.நகரில் உண்ணாவிரதம் நடக்கும் என்றும் கூறினார்.

இதற்கிடையில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட் 18 எம்.எல்.ஏக்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தால், இந்த வழக்கு குறித்து தன்னிடம் எந்த கருத்தும் கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காக சபாநாயகர் தரப்பபில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.