சண்டிகர்,

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பிரபல சாமியா ரான குர்மீத் ராம் ரஹீமின்  தேரா ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

இவர்களும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்களா என  அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரியானாவில்  குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்தில்தான் இளம்பெண் சாமியார்களை குர்மீத் ராம் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இளம்பெண்களை தான் மட்டுமே அனுபவிக்க எண்ணி, அந்த ஆசிரமத்தில் தங்கி இருந்து சேவை செய்து வந்த ஆண்களுக்கு ஆண்மையை நீக்கியுள்ளார்.

இந்நிலையில், சாமியார் சிறைக்கு சென்றதும், ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்து 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த அரசு  திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆசிரமத்தில் சாமியாரின் பலாத்காரம் சிலர் இறந்துள்ளதாகவும், அவரை எதிர்த்த வர்களும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது முன்னாள் பாதுகாவலர் ஒருவர்  அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ஆசிரமத்தில் தங்கிருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த தகவலை  சிர்ஸா நகர துணை ஆணையர் பிரபுஜோத் சிங் உறுதிபடுத்தி உள்ளனர். மேலும், அந்த சிறுமிகள் அனைவரும் தற்போது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

சிறுமிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியானாவில்  குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் போலீசார்  அதிரடி சோதனை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.