கடலூர் மத்திய சிறையில் 18 கைதிகளுக்கு கொரோனா…

கடலூர்:

டலூர் மத்திய சிறையில்  18 கைதிகளுக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. இது சக கைதிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை, மொத்தமாக 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கிடையில் சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது.

ஏற்கனவே சென்னை புழல் சிறையில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், கடலூர் சிறையிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே   8 சிரறை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிகை 26 ஆக அதிகரித்துள்ளது.