காவல்துறை அதிகாரிகள் 18 பேர் திடீர் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை

மிழக அரசின் காவல்துறை உயரதிகாரிகள் 18 பேரை அரசு இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் (ஐபிஎஸ்) 14 பேரை திடீரென மாற்றம் செய்துள்ளது. இது குறித்த உத்தரவை தமிழக அரசு உள்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.

அந்த மாற்றம் குறித்த விவரங்கள் வருமாறு :
1. சென்னை, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் கணேசமூர்த்தி மாற்றப்பட்டு டிஜிபி அலுவலக ஐஜி (பொது) ஆக மாற்றப்பட்டுள்ளார்.

2. அயல்பணியில் பயிற்சியிலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜியாக இருந்த செந்தில்குமாரி ரெயில்வே டிஐஜியாக (சென்னை) மாற்றப்பட்டுள்ளார்.

4. காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி விஜயகுமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. எஸ்பிசிஐடி எஸ்பியாக இருந்த ஜி.ராமர் அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

6. அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாக இருந்த தீபா கனிகர் போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராக இருந்த துரை திருவாரூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

8. திருவாரூர் எஸ்பியாக இருந்த விக்ரமன் சென்னை டிஜிபி அலுவலக தானியங்கி மின்னணுப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

9. கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை (மேற்கு) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. வேலூர் தலைமையிட ஏஎஸ்பி அதிவீரப்பாண்டியன் பதவி உயர்த்தப்பட்டு டிஜிபி அலுவலக காவலர்நலன் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

11. திருச்சி அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அரியலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

12. ஈரோடு அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பி பாலாஜி ஸ்ரீனிவாசன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

13. திண்டுக்கல் தலைமையிட ஏஎஸ்பி கே. பாலகிருஷ்ணன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக (பணி வரன்முறை) மாற்றப்பட்டுள்ளார்.

14. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையிட ஏஎஸ்பி கே.சண்முகம் பதவி உயர்வு அளிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை (தெற்கு) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

15. போலீஸ் அகாடமி ஏஏஸ்பி மீனா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, தலைமையிட, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

16.தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை ஏஎஸ்பி ஸ்டாலின் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலக கட்டுப்பாட்டறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

17.கோர்செல் சிஐடி சென்னை ஏஎஸ்பி சி.ராஜா பதவி ஊயர்வு அளிக்கப்பட்டு சென்னை எஸ்பிசிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

18.சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.