Random image

உத்தரப்பிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 18 பேர் பலி

முராத்நகர்: உத்தரப்பிரதேசத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தின் முராத்நகர் பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றில் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மழை பெய்ய துவங்க மயான கட்டடத்தில்  ஒதுங்கினர்.

திடீரென மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 32 பேர் மீட்கப்பட்டனர்.

மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.