சென்னை

மிழ் நாடு சட்டப் பேரவையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுகவின் மூன்று அணிகளில் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன.   அதன் பிறகு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் அணியில் அவருக்கு ஆதரவாக இருந்து வந்தனர்.   இரட்டை இலை சின்னம் எடப்பாடி – ஓ பி எஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டு ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது.   அந்த இடைத் தேர்தலில் தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி அடைந்தார்.

தேர்தல் முடிவுக்குப்  பிறகு தினகரன் அணியை சேர்ந்த 18 எம் எல் ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியில் இருந்து நீக்கப் பட்டதால் சட்டமன்ற உறுப்பினராக தொடர தகுதி நீக்கம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில் இன்று நீக்கப்பட்ட 18 உறுப்பினர்களின் சட்ட மன்ற தொகுதிகளும்  காலியாக உள்ளதாக பேரவை செயலாளர் பூபதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.