சென்னை,

டப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு புதிய நீதிபதி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது விசாரித்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இன்று புதிய  நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் வடமாநில பிரபல வழக்கறிஞர்கள்  கபில் சிபில், சல்மான் குர்ஷித், ராகேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி. அரிமா சுந்தரம், துஷ்யந்த் தவே  டிடிவி மற்றும் திமுக தரப்பில் ஆஜராகி வாதாடுகிறார்கள். அதுபோலஅதிமுக தரப்பிலும் பிரபல வழக்கறிஞர்கள் வாதாட இருக்கிறார்கள்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சபாநாயகர் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்தும், ஆனால்  18 பேர் தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவித்த  தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தடை விதித்தும் வழக்கு விசாரணை 4ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் வரவுள்ளது.

இந்த வழக்கில் தமிழக முதல்வர் மற்றும் சபாநாயக்ர சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பரபரப்பான இந்த வழக்கின் விசாரணை குறித்து அறிய வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் குவிந்து வருகின்றனர்.