‘பிகில்’ கலவரத்தால் மேலும் 18 புள்ளீங்கோ கைது…..!

 

 

தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய் நடித்த பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்ந்து தெரிவித்துவந்தனர்.

அதற்கு கடந்த 25ஆம் தேதி பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக் கட்டு போடப்படும் என்று விஜய் ரசிகர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

அதேபோல, கிருஷ்ணகிரியில் அதிகாலை 5 மணி காட்சியை, முன்கூட்டியே வெளியிடக் கோரி, விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். .

சம்பவம் தொடர்பான வீடியோக்களை வைத்து மேலும் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி