ரேபரலி,

உ.பி. மாநிலம் ரேபரேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உஞ்சார் என்ற இடத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் அனல் மின்சார நிலையம் உள்ளது. அதில் உள்ள 5-வது புதிய மின் உற்பத்தி பிரிவில் உள்ள பாய்லர் ஒன்று, நேற்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதன் காரணமாக பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் செய்தவறியாது திகைத்தனர். பலர் புகை காரணமாக மூச்சு திணறினர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் தீ யில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாய்லர் வெடித்த தினால் ஏற்பட்ட  புகை மூட்டத்தால் மீட்பு பணிகளில் ஈடுபட முடியாமல் தீயணைக்கும் படையினர் திணறினர்.

யினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த தொழிலாளர்கள்  சிகிச்சைக்காக  அனல் மின்நிலைய மருத்துவமனையிலும், ரேபரேலி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காயம் ஏற்பட்டவர்கள்  தீவிர சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

விபத்து நடந்த பாய்லர் பிரிவில் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்த முதல் யோகி, அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளதாகவும்,  பலியானவர் களின்  குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.