டெல்லி:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 19 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உளளது.

ஆந்திரா, குஜராத் ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் 18 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன.

இந்த இடத்திற்கான திய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன்.19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்  என்றும்  தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.