Random image

6 மாதத்தில் 18 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும்…..இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை:

அடுத்த 6 மாதத்தில் 2 வாரத்திற்கு ஒரு செயற்கைகோள் என 18 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நோவா எஸ்ஏஆர், எஸ்14 ஆகிய 2 செயற்கைகோள்களை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் ‘‘தகவல்தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்11, நிலாவின் மேற்பரப்பை ஆராய ஆறு சக்கரம் உள்ள ரோவர் வசதியுடன் கூடிய சந்திராயன்- 2 செலுத்த திட்டமிட்டுள்ளது.

அடுத்த 6 மாதத்தில் 2 வாரத்திற்கு ஒரு செயற்கைகோள் என 18 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது’’ என்றார்.