ஆப்பிள் நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கேட்டு 18 வயது இளைஞர் வழக்கு

நியூயார்க்: தனது முக அடையாளத்தை திருடனின் அடையாளத்துடன் தவறுதலாக இணைத்து, அதன்மூலம் தனது கைதுக்கு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது, 1 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் அமெரிக்காவின் 18 வயதான இளைஞர் ஒருவர்.

அவரின் பெயர் உஸ்மான் பாஹ். ஆப்பிள் நிறுவனத்தின் முக அடையாள மென்பொருள், தவறுதலாக இவரின் படத்தை திருட்டு சம்பவங்களுடன் சம்பந்தப்படுத்திவிட்டது. இதனால், அந்த இளைஞர் கற்றல் அனுமதியை இழந்ததோடு, ஒரு கட்டத்தில் கைதுசெய்யப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே, தனக்கேற்பட்ட பிரச்சினைகளுக்காக, 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு கேட்டு, மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஆனால், உண்மையிலேயே அனைத்து திருட்டுகளுக்கும் காரணமான நபர், உஸ்மானின் கற்றல் அனுமதியை ஆப்பிள் ஸ்டோரில் பயன்படுத்தியதால்தான் இந்த தவறு நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.