திருப்பதி,

செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது 180 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அடித்து உதைத்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று  செம்மரம் கடத்த வந்ததாக கூறி 179 தமிழர்களை ஆந்திர வனத்துறை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் உடைகளை களைந்து வெறும் ஜட்டியுடன் அமர வைக்கப்பட்டனர். மேலும் அவர்களது கைகளையும் கட்டினர். இதன் காரணமாக அவர்களால் தண்ணீர்கூட குடிக்க முடியாத சூழ்நிலை உருவானது.

அப்போது தண்ணீர் கேட்ட அவர்களுக்கு காவல்துறையை சேர்ந்த ஒருவர் வாயில் தண்ணீர் ஊற்றுவதுபோல காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர்களை அடைத்து உதைக்கும் காட்சி குறித்த படங்களும் வெளியாகின. அவர்கள் உடமைகளை அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களை இன்று பொதட்டூர் நீதி மன்றத்ததுக்கு கொண்டு செல்வதற்காக அடி மாடுகளை ஏற்றி செல்வதுபோல, ஒரு லாரியில் அனைவரையும் ஏற்றி சென்ற அவலம் நடந்தேறியது.

இந்த கொடூமையான சித்ரவதை காட்சிகள் அனைத்தும்   தொலைகாட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திராவில் உள்ள செம்மரம் வெட்டச் செல்வதாக கூறி தமிழர்களை தொடர்ச்சியாக ஆந்திர அரசு கைது செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  செம்மரம் வெட்டியதாக கூறி,  20க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர வனத்துறையினர் ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று 180 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உளளது.

நேற்று கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளும், கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறி உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களை தார்ப்பாய் போட்ட  லாரியில் ஆடு, மாடுகளை போல் ஏற்றி வந்தது மனித உரிமை மீறல் என்றும், அதுகுறித்து மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.