சென்னையை பிரித்து மேயும் கொரோனா… இன்று 1834 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 47ஆயிரத்தை கடந்தது…

சென்னை:

மிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 1834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் மக்கள் நெருக்கம் என்பதால் தொற்று அதிகரித்து வருவதாக கூறி வரும் தமிழகஅரசு, இன்று வெளியாகி உள்ள நோய் பாதிப்பின்படி, மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத மாவட்டங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது. இது தமிழக மக்களிடையே கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

bty

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து, பேயாட்டம் ஆடி ஆடி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று முதன்முறையாக  3 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னையிலும்  இதுவரை இல்லாத அளவாக  இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் மட்டும்த இதுவரை .694 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று குணமாகி  27,986 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்ததுள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

கடந்த 24 மணி நேரத்தில்  சென்னை மட்டுமில்லாத பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. 

சென்னை – 1,834, மதுரை – 204, செங்கல்பட்டு – 191,வேலூர் – 172, திருவள்ளூர் – 170, ராமநாதபுரம் – 140, காஞ்சிபுரம் – 98,கன்னியாகுமரி – 53, கரூர் – 3, நாகப்பட்டினம் – 10, நாமக்கல் – 1, நீலகிரி – 2, பெரம்பலூர் – 8, புதுக்கோட்டை – 1, கோவை – 29, அரியலூர் – 10, கடலூர் – 21,தருமபுரி – 1, திண்டுக்கல் – 15, ஈரோடு – 5, கள்ளக்குறிச்சி – 25, ராணிப்பேட்டை – 20, சேலம் – 89, சிவகங்கை – 25, தென்காசி – 12, தஞ்சை – 22, தேனி – 72, திருப்பத்தூர் – 18, திருவண்ணாமலை – 55, திருவாரூர் – 5, தூத்துக்குடி – 24, நெல்லை – 11, திருச்சி – 27, திருப்பூர் – 7, விருதுநகர் – 48, விழுப்புரம் – 40

 

கார்ட்டூன் கேலரி